மாதம்பட்டி ரங்கராஜ் - யோகி பாபு நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

 
1

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் யோகி பாபுவுடன் இணைந்து ‘மிஸ் மேகி’ படத்தில் நடித்துள்ளார். மிஸ் மேகி படத்தில் பெண் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். நடிகை ஆத்மிகா இப்படத்தில் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லதா ஆர்.மணியரசு இயக்கியுள்ளார்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார். ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டப்பில் வித்தியாசமான லுக்கில் யோகி பாபு இடம் பெற்ற டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தற்போது மிஸ் மேகி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், இப்படத்தின் டிரெய்லர், பர்ஸ்ட் சிங்கிள், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web