இணையத்தில் வைரலாகும் மலைக்கோட்டை வாலிபடன் படத்தின் டீசர்..! 

 
1

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. சியான் விக்ரமின் தங்கலான் படமும் ஜனவரி 25 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு படங்களும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

நடிகர் மோகன்லால் நடிப்பில் பல OTT படைப்புகள் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வருகின்றன. கடைசியாக தியேட்டரில் பிரம்மாண்டமாக வெளியான அரபிக் கடலின் சிங்கம் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், மலைக்கோட்டை வாலிபன் படத்தை ரொம்பவே நம்பி காத்திருக்கிறார் மோகன்லால்.

 இதில் மோகன்லாலுடன் இணைந்து சோனாலி குல்கர்ணி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, ஹரிஷ் பேரழி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரசாந்த் பிள்ளை இதற்கு இசை அமைக்கிறார்.

 இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். இதையடுத்து, ஜெயிலர் திரைப்படம் மலையாளத்தில் பெரிதளவில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, லூசிபர் 2 எம்புரான் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிருத்விராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாய், லண்டன், கேரளா என அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


From Around the web