நேதாஜி மரணம் குறித்த ரகசியங்களின் அடிப்படையாக உருவாகியுள்ள ‘ஸ்பை’ படத்தின் டீஸர் வெளியானது..!! 

 
1

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்ஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாக கொண்ட உருவாகியுள்ள படம் ‘ஸ்பை’. நிகில் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியா ஐஸ்வர்யா மேனன் மற்றும் சானியா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து அபிநவ் கோமடம், மகரந்த் தேஷ், ஆர்யன் ராஜேஷ், நித்தின் மேத்தா, ரவி வர்மா, சோனியா நரேஷ் என பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ சரண் பகக்லா மற்றும் விஷால் சந்திரசேகர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்து த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ED எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்த படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள நேதாஜி சிலையின் முன்பு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

From Around the web