டைட்டில் தீயா இருக்கு... அதான் தீயாலயே வரைஞ்சிட்டேன்
 

 
1

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் சு.செல்வம். இவர் நடிகர் அஜித்தின் புதிய படத்தின் அப்டேட் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் போஸ்டர் வெளியிட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு  “தீ”யை வாயால் பிடித்து நடிகர் அஜித் படத்தை வரைந்தார். அஜித்தின் அடுத்த படத்தின் தலைப்பான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் போஸ்டர் வெளியிட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படத்தின் தலைப்பே தீயாய் இருப்பதாககூறும் அவர், தீ எரியும் குச்சியை வாயில் வைத்துக்கொண்டு நடிகர் அஜித் படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

இதனை தற்போது இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். அஜித்தின் 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாகவும், மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

1

‘குட் பேட் அக்லி’ என பெயரிட்டுள்ள போஸ்டரில் முள்வேலி, துப்பாக்கி போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன.இதை பார்க்கையில் டைட்டிலே தீயாய் இருக்கு படமும் ஆக்‌ஷன் கலந்த தீயாய் இருக்கலாம் என்பதால், ஓவியர் செல்வம் அவர்கள் தீயை குறிக்கும் விதமாக குச்சியின் ஒரு பகுதியை எரிய வைத்து மற்றொரு பகுதியை வாயில் வைத்து கொண்டு தீ எரியும் நெருப்பு பகுதியில் நடிகர் அஜித் உருவத்தை “வாயாலேயே” “தீ”யை பிடித்து 5 நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார்.

From Around the web