திருமணத்திற்கு பின் கவின் நடிக்கும் முதல் படத்தின் டைட்டில் வெளியானது ..!

’டாடா’ படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இளன் இயக்கத்தில் கவின் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகிகளாக ’லவ் டுடே’ இவானா மற்றும் ’பேச்சுலர்’ திவ்ய பாரதி ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று கவின் தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் ’ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் அது உண்மையா என்பதை நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. தற்போது படத்தின் பெயர் போஸ்டரில் வெளியானது, படத்தின் பெயர் என்னவென்றால் ஸ்டார்! அதை தொடர்ந்து படத்தின் சிறப்பு ப்ரோமோ வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்த போதிலும்..
— Kavin (@Kavin_m_0431) August 28, 2023
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!#Star
Special promo on Aug 31st ⭐️ pic.twitter.com/ei4SWbOFgz