டைட்டில் மாற்றப்பட்ட ‘வடக்கன்’.. புதிய டைட்டில் இதுதான்..!

 
1

 ’வடக்கன்’ என்ற திரைப்படம் கடந்த  மே 24ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென சென்சார் அதிகாரிகள் அந்த படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த படத்திற்கு தற்போது ’ரயில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

’வடக்கன்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் அந்த படத்தின் காட்சிகளுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதன் காரணமாக புதிய டைட்டில் வைப்பதற்காக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. தற்போது இந்த படத்திற்கு ’ரயில்’என்ற டைட்டில் வைக்கப்பட்டு புதிய டைட்டிலுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web