ஹாலிவுட்டை வாட்டும் சோகம்..! ‘ஜான் விக்’ பட நடிகர் லான்ஸ் ரெட்டிக் மரணம்..!!

 
1

1996-ல் ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் வெளியான ‘நியூயார்க் அண்டர்கவர்’ தொடரின் மூலம் அறிமுகமானவர் லான்ஸ் ரெட்டிக். அதனைத் தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்த நிலையில், 1998-ல் வெளியான ‘கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்’ ஹாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து காட்ஜில்லா, தி சீஜ், ஐ ட்ரீம்ட் ஆப் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Lance Reddick

2014-ல் வெளியான ‘ஜான் விக்’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்பட வரிசையில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். இந்த ஆண்டு அப்படத்தின் நான்காம் பாகம் வெளியாகிறது. இந்த படத்திலும் லான்ஸ் ரெட்டிக் நடித்துள்ளார். படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அப்படத்தின் நடிகர் உயிரிழந்துள்ளது, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஜான் விக் நடிகர் லான்ஸ் ரெட்டிக், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். இந்த செய்தியை அவரது தகவல் தொடர்பு அதிகாரி மியா ஹேன்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லான்ஸ் இயற்கை எய்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, அவரது மரணம் குறித்த வேறு எந்த தகவல்களும் அவரிடமிருந்து பகிரப்படவில்லை.

RIP

ஜான் விக் படத்தின் இயக்குநர் சாட் ஸ்டெஹேல்ஸ்கி மற்றும் அப்படத்தின் நாயகன் கியானு ரீவ்ஸ் ஆகியோர் இணைந்து, மறைந்த நடிகர் லான்ஸிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதில், “எங்களது நெருங்கிய நண்பர் லான்ஸ் ரெட்டிக்கின் உயிரிழப்பு எங்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. இப்பேற்பட்ட நல்ல நடிகருடன் பணிபுரிந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என அந்த குறிப்பிட்டிருந்தனர். மேலும், லான்ஸை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், சில நாட்களில் வெளியாகவுள்ள ஜான் விக் படத்தை லான்ஸிற்காக அர்பணிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

லான்ஸ் ரெட்டிக்குடன் பணிபுரிந்த நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் என பலரும் அவரது மரணத்திற்காக தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

From Around the web