புள்ள மேல கையை வெக்குறதுக்கு முன்னாடி அவன் அப்பனா தொடு டா பார்க்கலாம்..! பட்டய கிளப்பும் ஜவான் பட டிரெய்லர்!

 
1

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜவான்’. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

Jawan

ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகிறது.

இந்த நிலையில், ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிரூத், இயக்குநர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிலையில் தற்போது ‘ஜவான்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கையில், பிரமாண்ட காட்சிகளோடும் ஆக்‌ஷன் நிறைந்த ரிவெஞ்ச் ட்ராமாவாக பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஷாருக்கானின் ஹீரோயிசம், நயன்தாராவின் ஸ்டைலிஷ் தோற்றம், விஜய் சேதுபதியின் வில்லனிசம், எனப் படத்திற்கு ஆர்வம் தூண்டும் வகையில் இந்த டிரைலர் அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

From Around the web