காதல், ஆக்ஷன் என கலவையான காட்சிகள் நிறைந்த ‘ஜோஷ்வா’ பட ட்ரெய்லர் வெளியானது..!

 
1

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான்  ஜோஷ்வா .

வருண் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வருணுக்கு ஜோடியாக நடிகர் ஆரவின் மனைவி ராஹே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இப்படத்தில் கிருஷ்ணா, யோகி பாபு, திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு தரமான செய்கையை செய்துள்ளது .

நெடு நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருக்கும் இப்படத்தின் புதிய ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது .காதல், ஆக்ஷன் என கலவையான காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

From Around the web