‘கள்ளிப்பாலில் ஒரு டீ’ ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர் வெளியானது..!
Nov 30, 2023, 06:05 IST

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கு ’கள்ளிப்பாலில் ஒரு டீ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆந்தாலஜி திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை 4 பெண் இயக்குனர்கள் இயக்க உள்ளனர்.
அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகிய நான்கு பெண் இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது இந்த ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரல்!