விரைவில் அமானுஷ்யத்துடன் பக்கங்கள் புரட்டப்படும் - ஹாரர் படமான ‘கருங்காப்பியம்’ டிரெய்லர் வெளியீடு..!!

பிரபல நடிகை காஜல் அகர்வால், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருங்காப்பியம்’. இந்த படத்தை ‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ போன்ற படங்களை’ இயக்கிய டிகே இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன், யோகிபாபு, அதிதி ரவீந்திரநாத், ஷெர்லின் சேத், நோய்ரிகா, லொல்லு சபா மனோகர், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
Happy to share #TrailerKarungappiyam. Congrats team #Karungappiyam.
— VijaySethupathi (@VijaySethuOffl) January 30, 2023
https://t.co/lVQTHgUXiD@MsKajalAggarwal @ReginaCassandra @KalaiActor @iYogiBabu @jananihere @aadhavkk @VijaytvpugazhO @PaVeEntertainm1 @deekaydirector @prasad_sn_ @editorvijay @APIfilms @SanjitSivStudio