‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

 
1

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக வலம் விஜயசேதுபதியின் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’ . வரும் கிறிஸ்துமஸ் அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் ராதிகா ஆப்தே, காயத்ரி சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் அதே பெயரில் ரீமேக் ஆகி உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது . இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web