சஸ்பென்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள பிரியா பவானி சங்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!! 
 

 
1

‘லட்சுமி’, ‘மா’ உள்ளிட்ட குறும்படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் சர்ஜூன். இவர் நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படத்தை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பிளட் மணி’ படத்தை இயக்கியுள்ளார். சஸ்பென்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கிஷோர், சிரிஷ், பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சதிஷ் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். சங்கர் தாஸ் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

‘பிளட் மணி’ படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 24-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டில் வேலைக்காகச் சென்று மாட்டிக்கொண்டுள்ள சிலரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பத்திரிக்கையாளர் வேடத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.


 

From Around the web