வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள  ‘புர்கா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!!

 
1

‘ஐரா’ படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானவர் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புர்கா’. இந்த படத்தில் கலையரசன் மற்றும் மிர்னா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே.எல்.எஸ். கேலக்ஸி மால் நிறுவனத்தின் சார்பில் சாரா மோகன் மற்றும் தினகர் பாபு ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். 

Burqa

இந்த படத்திற்கு சிவாத்மிகா இசையமைப்பாளராகவும், ஜி பாலமுருகன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றனர். அனுசுயா வாசுதேவன் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். இருவேறு பின்னணியில் இருக்கும் இருவர் சந்திக்கின்றனர். அதன்பிறகு படத்தில் என்ன நடக்கிறது என்பது படத்தின் மொத்த கதையாக உள்ளது. இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.  

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ளது. வரும் ஏப்ரல் 7-ஆம் இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடித்தளத்தில் வெளியாகியுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web