இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தின் ட்ரைலர் வெளியானது..!! 
 

 
1

கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே, போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வசந்த் இயக்கத்தில் உருவான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்ற அந்தாலஜி திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த படத்தில் நடிகை பார்வதி, லக்ஷ்மிகுமார் சந்திரமௌலி, கருணாகரன், சுந்தர் ராமு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் வசந்தே அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார் என்பது கூடுதல் தகவல். 

தற்போது அந்தப் படத்தை சோனி லைவ் ஓடிடி வாங்கி வெளியிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பெண்கள் மீது காலம் காலமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உடைக்குமாறு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web