சரியான காம காட்டு எருமை சார் அவன் - வெளியான டாடா படத்தின் ட்ரைலர்..!! 

 
1

சின்னத்திரை  சீரியல் மூலம் பிரபலமான கவின் அதையடுத்து பிக்பாஸ் மூலம் இன்னும் அதிகமாக பிரபலமானார். அவர் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்த லிப்ட் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.  தற்போது ‘டாடா’என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில்  ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 

1

இப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   ரொமாண்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.  ஏற்கனவே படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

From Around the web