மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரைலர்  வெளியானது..!

 
1

 நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கும்  ’துருவ நட்சத்திரம்’  படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கு மேலாக இருக்கும் இந்த ட்ரைலரில் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பேஸ்மெண்ட் என்ற டீம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த டீமில் உள்ளவர்களுக்கு சட்ட திட்டம் எதுவும் கிடையாது என்றும் யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் என்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இந்த டீம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரி ஒருவர் பார்த்திபனிடம் கூறுகிறார். கிட்டத்தட்ட ‘விக்ரம்’ படத்தில் வரும் பகத் பாசில் டீம் மாதிரி இந்த டீம் என தெரிகிறது.

இந்த டீமில் 10 பேர் இருக்கிறார்கள், ஆனால் இன்னும் ஒருவர் வேணும் அவர் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி சொல்ல அவர் தான் சியான் விக்ரம் என காண்பிக்கப்படுகிறது. உன் டீமுக்கு பெயர் இருக்கா? என்று விநாயகன் விக்ரமிடம் கேலியாக கேட்கும்போது ’இருக்குது ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ என்று பதிலுக்கு நக்கலுடன் விக்ரம் பதிலளிக்கும் காட்சியும் அதற்கு விநாயகனின் சிரிப்பும் அசத்தலாக உள்ளது.

’சச்சின் மாதிரி, தோனி மாதிரி ஆகணும்னா கிரவுண்டுக்கு வரணும்’ என்ற கௌதம் மேனன் வசனமும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மொத்தத்தில் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரைலரே அட்டகாசமாக இருக்கும் நிலையில் நிச்சயம் சியான் விக்ரமுக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web