இணையத்தை கலக்கும் விமலின் ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் ட்ரைலர்..! 

 
1

நடிகர் விமல் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். இதில் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா நடித்துள்ளார்.

மேலும் சதிஷ், சுரேஷ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார் இந்த படம் கண்டிப்பாக திருப்பு முனை தரும் என எதிர்பார்க்க படுகிறது…ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது…இது ஹிட் அடித்தல் விமல் Comeback ஆக இருக்கும்..படத்தின் ட்ரைலரும் அதனை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது..

நடிகர் விமலுக்கு சமீபகாலமாக பெரிய அளவில் படங்கள் கைகொடுக்கவில்லை. இறுதியாக அவர் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

தெய்வமச்சான், குலசாமி படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை சரியான ரிலீசாகவும் அது அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும்..

From Around the web