
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோட்டில் ராஜி வீட்டுக்கு வந்ததும் புது டிரெஸ் எல்லாம் போட்டு ரெடியாகிறாள். மீனா அவளை பார்த்து என்ன ராஜி? எங்கயோ போற மாதிரி ரெடி ஆகி இருக்க. என்ன விஷயம் என கேட்கிறாள். அவளிடம், இல்லக்கா. திருவிழால வின் பண்ண பைக்கை இன்னைக்கு வந்து கொடுக்குறாங்கள்ள. போட்டோலாம் எடுப்பேன் சொன்னாங்க. அதான் ரெடி ஆனேன் என சொல்கிறாள்.
அதனை தொடர்ந்து பைக் கொடுக்க ஆட்கள் வருகின்றனர். ராஜியை அழைத்து சாவியை வழங்க, அவள் கதிரை கூப்பிடுகிறாள். நீதான பைக் ஓட்ட போற. நீயே வாங்கு என சொல்கிறாள். அதற்கு அவன் நீ கஷ்டப்பட்டு ஜெயிச்சது. நீயே வாங்கு என்கிறாள். அப்போது பாண்டியன் ரெண்டு பேரும் சேர்ந்து வாங்குங்க என கூறுகிறான். அதனை தொடர்ந்து பைக்ல ரவுண்டு போகலாம் என சொல்ல ராஜி உடனே ரெடி ஆகிறாள். கதிர் அவளை வெறுப்பேத்தலாம் என சொல்லி முதலில் பழனியை அழைத்து கொண்டு போகிறான்.
அதன்பின்னர் கோமதி, சரவணன் ஆகியோரை பைக்கில் ஏற்றுகிறான். இதையெல்லாம் பார்த்து ராஜி கடுப்பாகிறாள். அவளை இன்னும் வெறுப்பேத்தலாம் என நினைத்து அப்பாவை கூப்பிட்டுகிறான். வாங்க கடைல இறக்கி விடுறேன் என சொல்கிறான். அவரும் சரியென வண்டியில் ஏற, அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
அதனை தொடந்து கதிர் அப்பாவை கடையில் இறக்கிவிட்டு செந்திலை அழைத்து கொண்டு கிளம்புகிறான். நீ ஓட்டு அண்ணே என வண்டியை கொடுக்கிறான். ரெண்டு பேரும் ரவுண்டு போக, அண்ணி கூட இந்த வண்டில ரவுண்டு போண்ணே. என் வண்டி அப்படிலாம் நினைக்காத. என்கிட்ட சொல்ல கூட வேணாம். எடுத்துட்டு போ என்கிறான். அப்போது செந்தில் ராஜியை வண்டில கூட்டிட்டு போனியா என கேட்கிறான். அவன் இன்னும் இல்லையென சொல்ல, மொத ராஜியை கூட்டிட்டு போட என்கிறான்.
இதனிடையில் அரசி கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுப்பது பற்றி கோமதி பேசி கொண்டிருக்கிறாள். அப்போது சரவணன் வந்து நானும் தங்கமயிலும் என்னோட வேலை பார்க்குறவங்க எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்துட்டு வர்றோம் என்கிறான். இதனைக்கேட்டு அவள் ஹேப்பியாகி கிளம்புகிறாள். வண்டியில் ஏறுவதற்கு முன்பாக அவனிடம் நல்லவேளை உங்களுக்கு என்மேல இருந்த கோபம் எல்லாம் போயிருச்சு என சந்தோஷமாக பேசுகிறாள்.
அதற்கு அவன் உன்மேல கோபம் போச்சுன்னு யார் சொன்னா? இப்போ நம்ம நீ படிச்ச காலேஜுக்கு போறோம் என்கிறான். இதனைக்கேட்டு தங்கமயில் ஆடிப்போகிறாள்.