எனது பிறந்தநாளில் கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அமீரகம்...!!

 
1

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரான இவருக்கு  ஜான்வி கபூர், குஷி கபூர் என இருமகள்கள் உள்ளனர். தற்போது அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். 

இதற்கிடையே பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு  ஐக்கிய  அரபு அமீரகம்  ‘கோல்டன் விசா’ வழங்கி வருகிறது. அந்த வகையில் மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், நடிகை திரிஷா, பாடகி சித்ரா உள்ளிட்ட சில பிரபலங்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி துபாய் அரசு கவுரவப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர், அவரது மகள்களாக ஜான்வி மற்றும் குஷி ஆகியோருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள போனி, எனது பிறந்தநாளில் எனக்கும், எனது 4 குழந்தைகளுக்கும் கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். கோல்டன் விசா வாங்கிய போனி கபூருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


 

From Around the web