சோனு சூட்டை நேரில் சந்திக்க ரசிகர் செய்த துணிகரச் செயல்..!
 

 
ரசிகர் வெங்கடேஷுடன் சோனு சூட்

நடிகர் சோனு சூட்டை நேரில் சந்திப்பதற்காக தெலங்கானாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் செய்த துணிகரச் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் சோனு சூட். அதை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர், மிகவும் கவனிக்கத்தக்க படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

கொரோனா காலகட்டத்தில் உதவி தேவைப்படுவோருக்கு நேரடியாக உதவிகளை செய்தார். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல சொந்த செலவில் வாகனங்களை ஏற்பாடு செய்து தந்தார்.

அதை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் தொடர்ந்து அவர் உதவிகளை செய்து வருகிறார். இவருடைய மனிதநேயத்தை போற்றும் வகையில் பல ரசிகர்கள் அவர்களுக்கு பிலெக்ஸ் உள்ளிட்ட பேனர்களை வைத்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்கிற நபர் சுமார் 700 கி.மீ வெறுங்காலில் நடந்து சென்று சோனுசூட்டை சந்தித்துள்ளார். எதற்காக அந்த ரசிகர் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் ரசிகரை சந்தித்த பின் இனி ஒதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என சோனு சூட் அவருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மீண்டும் அந்த ரசிகரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
 

From Around the web