வைரலாகும் வீடியோ..! பிரபல சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா ரேஷ்மா? 

 
1

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் நடிகை  ரேஷ்மா. தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி ஜீ தமிழில் சீதாராமன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு சீரியல்களும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரேஷ்மா தற்போது லைவ் வீடியோ ஒன்றில் இரண்டு சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆகையால் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போவதாகவும் ஒரு சீரியிலிருந்து வெளியேறப் போவதாகவும் அது எந்த சீரியல் என்று அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறேன் தற்போது வரை அது குறித்து முடிவெடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

From Around the web