இணையத்தில் வைரலாகும்  வீடியோ..! ரசிகர்கள் கூட்டத்தில் தளபதி..!

 
1

இந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் . இதுநாள் நாள் வரை திரையுலகில் கலக்கி வந்த நடிகர் விஜய் இனி அரசியலிலும் கலக்க தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் .

அதிலும் குறிப்பாக இதுவரை நாம் கமிட் செய்துள்ள படங்களை முழுமையாக முடித்த பின்பு தான் முழு நேர அரசியலில் இறங்குவேன் என்று தளபதி விஜய் தெரிவித்துள்ளார் .

அந்தவகையில் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் THE GOAT .

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி தளபதியின் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்றது

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் ரசிகர்கள் தற்போது படப்பிடிப்பு தளத்திற்கே சென்று படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் .

GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுசேரியில் நடைபெற்று வரும் நிலையில் அதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள் தளபதியின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து கூற அவரை சந்திக்க படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளனர் .

இதையடுத்து ரசிகர்களை கண்டதும் தளபதி விஜய் வருகை தந்து சிரித்தபடி கையசைத்து பத்திரமாக போய்ட்டு வாங்க என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் கூட்டத்தில் தளபதி நிற்கும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.


 

From Around the web