சிறகு முளைச்சிடுச்சு அதான் எழில் பறந்திட்டார்... கோபி வெளியிட்ட பதிவு..!

 
1

பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் குடும்பத் தலைவியாக இருக்கும் பாக்கியா, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை தாண்டி, தனது பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், வீட்டுக்கு வந்த மருமகளின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் என்பவற்றை தனியாக நின்று சமாளித்து வெற்றி பெறுகிறார்.

அதிலும் தற்போது ராதிகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்தும் கோவபடாமல் பக்குவமாக இருக்கிறார். மனதில் கவலை இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் தனது பிள்ளைகள், மாமா, மாமி என குடும்பத்தை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்.

தற்போது இந்த சீரியலில் இதுவரையில் எழில் கேரக்டரில் நடித்து வந்த விஷால் திடீரென விலகி இருந்தார். இதற்கான காரணங்கள் எதுவும் இன்னும் வெளிவர இல்லை.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து எழில் விலகிய நிலையில். அதற்காக வருத்தப்பட்டு பதிவிட்டுள்ளார் கோபி. அதன்படி அவர் கூறுகையில்,  நிஜமாகவே எழில் எதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார் என தெரியவில்லை. ஆனால் சிறகு முளைத்து பறந்து போக வேண்டும் என நினைக்கிறார். அவர் பத்திரமாக வானத்தில் பறக்க வேண்டும் என ஒரு தந்தையாக நான் சொல்லி அனுப்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

From Around the web