சீரியல் ஹீரோவைவிட அவர் அம்மாவாக நடிக்கும் நடிகைக்கு வயது குறைவு ..!!

 
நடிகர்கள் மீரா மற்றும் தீபக்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை, அந்த நடிகரை விடவும் வயது குறைந்தவர் என்கிற விபரம் தெரியவந்துள்ளது.

மலையாளத்தில் வெளியான ‘மார்கம்’ என்கிற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

எனினும் அவர் சீரியல் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக மட்டுமே நடிக்கிறார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் ஹீரோ தீபக்கிற்கு அம்மாவாக நடிக்கிறார்.

நடிகை மீரா சின்னத்திரைக்கு வந்து மூன்றாண்டுகளுக்குள் தான் இருக்கும். ஆனால் தீபக் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி துறையில் இருக்கிறார். அதன்படி நடிகர் தீபக்கிற்கு வயது நாற்பதாகிறது.

ஆனால் அவருக்கு அம்மாவாக நடிக்கும் மீராவுக்கு வயது வெறும் 34 தான். இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. எனினும் தயக்கமில்லாமல் அம்மா ரோலில் நடித்து வரும் மீராவுக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

From Around the web