உடைத்து பேசிய திரையரங்க உரிமையாளர்..! இதனால் தான் விஜய் நம்பர் ஒன்..

 
1

மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான படம் விடாமுயற்சி. இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது. விடாமுயற்சி திரைப்படம் ஒரு மாஸ் ஹீரோவுக்கான படம் இல்லை என்றும், அஜித் ஏன் இதுபோன்ற ஜானர் படங்களை தேர்வு செய்தார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

அதே சமயம் அஜித் இதுபோன்ற ஜானரில் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் நடித்தது வித்யாசமாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். 

விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான GOAT படத்தின் வசூலை முந்துவது தான் அஜித் ரசிகர்களின் டார்கெட்டாக இருக்கின்றது. அப்படி இருக்கையில் GOAT திரைப்படத்தை விட விடாமுயற்சி குறைவான வசூலையே பெற்றுள்ளதாக தெரிகின்றது.

இந்நிலையில் சென்னையில் இருக்கும் பிரபலமான திரையரங்கங்களில் ஒன்று தான் woodlands. இந்த திரையரங்கின் உரிமையாளர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜய் தான் நம்பர் ஒன் என கூறி இருக்கின்றார். அஜித் படங்களை விட விஜய் படங்கள் அதிகம் வசூலிப்பதாக கூறியுள்ளார் woodlands உரிமையாளர்.

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு ஆயிரம் கோடி லாபம் கிடைக்கின்றது என்றால் அதில் விஜய்யின் படம் 350 கோடி வரை லாபம் கொடுத்திருக்கும். விஜய் தொடர்ந்து படம் கொடுக்கின்றார், அதே போல அஜித்தும் தொடர்ந்து படங்கள் கொடுத்தால் அவரும் அந்த இடத்தை பிடிக்கலாம். அஜித் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என்றார் woodlands உரிமையாளர்.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் இதுபோன்ற எந்த ஒரு ஹீரோ இமேஜ் பற்றியும் கவலைப்படாமல் அஜித் நடித்தது பலரால் வரவேற்கப்படுகிறது. என்னதான் அஜித் ரசிகர்களால் இதை சற்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் பொதுவான ரசிகர்களிடம் அஜித்தின் இந்த முடிவு பாராட்டுகளை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  

From Around the web