ஊருல 1000 விஷயம் இருக்கு.. ஆனா என்ன பத்தி ஏன் பொய் பேசுறீங்க?
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
38 வயதான வரலட்சுமி சரத்குமார், இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. என பல்வேறு கிசுகிசு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை வரலட்சுமிக்கு ஆர்ட் கேலரி உரிமையாளர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 1ம் திகதி நடைபெற்றது.
ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், 11 வயதில் மகள் ஒருவரும் உள்ளார் என கூறப்பட்டது.
மறுப்பக்கம், அண்மையில் சரத்குமார் தன்னுடைய ச.ம.க கட்சியை பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக கூறியிருந்தார். அன்றிலிருந்து அவரது பேச்சு சமூக ஊடகங்களில் பேசும் பொருளானது. அதைத் தொடர்ந்து அவரது மகளான வரலட்சுமியின் பழைய செய்திகளும் மீண்டும் வைரலாகி வருகின்றன
இந்த நிலையில், தற்போது தன்னை பற்றி பொய்யான பழைய செய்திகளை ஏன் பரப்புகின்றீர்கள் என ஊடக நிறுவனங்களை கடுமையாக சாடியுள்ளார் நடிகை வரலட்சுமி. அதன்படி, நடிகை வரலட்சுமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,
நமது அறிவார்ந்த செய்தி நிறுவனங்களே, வேறு செய்திகள் இல்லாததால் பழைய பொய்யான செய்திகளை மீண்டும் சுற்றளில் விட்டுள்ளீர்களா? குறிப்பாக சுய பிரகடனம் செய்யும் போது செய்தி நிறுவனங்கள் உங்களது கட்டுரைகளில் ஏன் உண்மையான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சினிமா நடிகர்கள், நடிகர்களிடம் உள்ள குறைகளை பார்ப்பதை கைவிடுங்கள். நாங்கள் எங்களது வேலையான நடிப்புத் தொழிலை தான் செய்கிறோம். ஆனால் நீங்களோ உங்கள் வேலை சரியாக செய்கிறீர்கள் இல்லை.
உண்மையிலேயே கவனம் கொள்ள வேண்டிய ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. நாங்கள் அமைதியாக இருப்பதால் பலவீனமானவர்கள் என நினைக்க வேண்டாம். அவமதிப்பு வழக்குகளும் தற்போது ட்ரெண்டிங்கில் தான் இருக்கின்றன. அடிப்படை ஆதாரமற்ற பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள். நம்மை பெருமைப்பட வைக்கும் நிஜமான செய்திகளை மக்களுக்கு வழங்குங்கள் என கூறியுள்ளார்.
It’s so sad that our talented media has no news than to start circulating old #fakenews. Our dear journalists especially the self proclaimed news sites and your articles, why don’t you actually start doing some real journalism! Stop finding flaws with your celebtrities, we are…
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) March 14, 2024
It’s so sad that our talented media has no news than to start circulating old #fakenews. Our dear journalists especially the self proclaimed news sites and your articles, why don’t you actually start doing some real journalism! Stop finding flaws with your celebtrities, we are…
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) March 14, 2024