எத்தனையோ படங்கள் இருந்தும்... இந்த படத்திற்கு விருது கொடுப்பதா ? சீறும் நெட்டிசன்கள்…

 
1

இந்தியா முழுவதும் பிரபலம அடைந்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா.அதுவும் ஒரே படத்தில். அந்த படம் தான் அர்ஜுன் ரெட்டி  இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து துருவ் விக்ரம் நடித்திருந்தார். அடுத்து இந்தியில் ரீமேக் செய்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட்டும் கொடி கட்டி பறந்தது.

அதன் பின் சந்தீப் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம், அனிமல். இப்படத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பலர் படத்திற்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். படத்தை தடை செய்யவும் கூறினர்.

ஆண் ஆதிக்கம், பெண் கொடுமை என பல தரப்பட்ட விமர்சனங்கள் இப்படத்தை சுற்றி எழுந்தன. மேலும், இயக்குநர் சந்தீப் ரெட்டியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் பாலிவுட், கோலிவுட் என பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் அனிமல் படத்திற்காக சிறந்த இயக்குநர், விருது சந்தீப் ரெட்டிக்கு வழங்கப்பட்டது. இதனால் ஒரு பெண் அடிமைத்தனத்தை காட்டிய அனிமல் படத்திற்கு எப்படி விருது கொடுக்க முடியும். இதனால், உயரிய தாதாசாகேப் பால்கே விருதுக்கான மதிப்பே போய்விட்டது என கடுமையாக சாடி வருகின்றனர்.


 


 

From Around the web