இங்கு பெயர் தெரியாத கொடுமையான வில்லன்கள் இருக்கின்றார்கள் - ஷாலினி ஜோயா..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் ஷாலினி ஜோயா.
சமீபத்தில் இவர் கேரளா சினிமாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எடவேல பாபு உடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
ஷாலினி ஜோயாவின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டானபோது அவருடன் ஷாலினி சோயா அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இதை பார்த்து டென்ஷனான ஷாலினி, எதை சொல்வதாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேணாமா? முதலில் என்ன நடந்தது என்று தெரியுமா என்று விளக்கம் கூறியுள்ளார்.
அதாவது பல வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றின் போது குறித்த வீடியோ எடுக்கப்பட்டது. அதன் இடைவேளையில் டிக் டாக் வீடியோக்காக செய்தது. அந்த பிரச்சனைக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. உண்மையில் இங்கு பெயர் தெரியாத கொடுமையான வில்லன்கள் இருக்கின்றார்கள் அவர்களை நான் வெறுக்கின்றேன் என கோபத்தோடு வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறிய கமெண்டில், இந்த கமெண்ட் எல்லாம் பார்க்கும்போது தனக்கு விபரீத எண்ணம் தோன்றுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இது ரொம்ப வருத்தமா இருக்கின்றது. நான் எந்த தவறுமே செய்யவில்லை என மனம் வருந்தி ஷாலினி சோயா பதிவிட்டுள்ளார்.