உங்க கோவத்துல ஒரு நியாயம் இருக்கு ஆர்ஜே பாலாஜி..!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரன்பிர் கபூரின் நடிப்பில் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அனிமல்.
உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.என்னதான் அவர்கள் ஊரில் இப்படம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படத்தில் அதிக அளவில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் அந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.இளம் தலைமுறைகள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை கிளப்பிய இப்படத்தை சில திரை பிரபலங்களும் தாறுமாறாக கழுவி ஊதினர்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி அனிமல் படம் குறித்து செம காட்டமாக பேசி இருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : நான் அனிமல் படத்தை பார்க்கவில்லை. அந்த படத்தில் பெண்களை அடித்து, துன்புறுத்துவது, ஷூவை எல்லாம் நக்க சொல்வது போன்ற காட்சிகள் இருந்ததாக கேள்விபட்டேன்.
இந்த மாதிரியான காட்சிகளை ரசிகர்கள் கை தட்டி ரசிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நானும் என்னுடைய படத்தில் அப்படியான காட்சியை வைத்து விட்டால் நல்லாவா இருக்கும் என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
 - cini express.jpg)