ஈரமான ரோஜாவே சீரியலுக்கு குட்பை சொன்ன கதாநாயகி..?

தொலைக்காட்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் நாடகத்தை விட்டு விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
 
eeramanave rojave

விஜய் தொலைக்காட்சியில் மாலை 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ‘ஈரமான ரோஜாவே’. தம்பி காதலித்த பெண்ணை அண்ணன் மணந்துகொள்வார், அண்ணனுக்காக நிச்சயித்த பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்வார்.

மிகவும் ட்விஸ்ட்டிங்கான அம்சத்துடன் ஒளிப்பரான இந்த தொடர் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் சித்தார்த், கேப்ரில்லா, திரவியம் மற்றும்  ஸ்வேதா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

dhiraviyam

குறிப்பாக திரவியம் மற்றும் ஸ்வேதா ஜோடிக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இவர்கள் சேர்ந்து வரும் காட்சிகளில் சின்ன நகைச்சுவைகள், குறும்பான சீண்டல்கள் மற்றும் அனல் பறக்கும் வசனங்கள் என எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

இந்நிலையில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் இருந்து கதாநாயகி ஸ்வேதா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் திரவியம் போட்ட ஒரு இன்ஸ்டா பதிவு தான். அந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரவியம், விரைவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் வரவுள்ளது. அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

dhiraviyam

இதுதொடர்பாக சீரியல் வட்டாரத்தில் விசாரித்ததில், பவித்ரா ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் இருந்து விலகுவதில் எந்த உண்மையும் கிடையாது. இதை உறுதி செய்யும் வகையில் பவித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதா, திரவியத்துடன் சேர்த்து எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்தை தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார்.
 

From Around the web