இன்டர்வல்ல ஒரு சாங் வேற லெவல்ல இருந்துச்சு.. விடுதலை படம் குறித்து கூல் சுரேஷ்..!
விடுதலை 2 படத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதன் முதலாவது பாகத்தில் கேமியோ கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதிக்கு, விடுதலை படத்தின் 2வது பாகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விடுதலை 2 படத்தை பார்த்த கூல் சுரேஷ், தியேட்டர் வாசலில் இருந்து வழங்கிய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், விஜய் சேதுபதி ஒரு கருப்பு கமலஹாசன். அவர் உலக அளவில் பேசப்பட வேண்டிய கலைஞர்.
அதைப்போல சூரி நீ வேற மாதிரி... சூப்பரா நடித்திருக்கிறார் சூரி.. அதுலையும் இன்டர்வல்ல ஒரு சாங் வேற லெவல்ல இருந்துச்சு.. என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்த சேத்தன் ஐந்து அடி இருந்துட்டு 56 அடி வரைக்கும் நடித்துள்ளார் என அவரையும் பாராட்டி உள்ளார்.
மேலும் விஜய் சேதுபதியின் இந்த படமும் உலக அளவில் பேசப்படும். ஆனால் அவர் பிக்பாஸ் போன்ற கருமத்தை ஏன் செய்கின்றார்? அதை மட்டும் பண்ணாதீங்க.. என்று தனது ரசிகர்களுக்கு மத்தியில் தெரிவித்து உள்ளார்.