பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது போலையே..!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சர்ச்சை பிரபலங்களை தட்டி தூக்க விஜய் டிவி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆமாம் விஷ்ணு காந்த், சம்யுக்தாவை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதுமட்டுமல்லாமல் பிரியங்காவின் கணவர் பிரவீனையும் பிக் பாஸ் போட்டியாளராக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரியங்கா தனது கணவன் பற்றி எங்கும் பேசாமல் இருந்து வர இருவருக்கும் இடையே பிரச்சனை என சொல்லப்பட்டு வரும் நிலையில் விஜய் டிவி இப்படி ஒரு திட்டம் தீட்டியுள்ளது.

அதே போல் ரஞ்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷையும் அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பிக் பாஸ் சீசன் 7 சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

From Around the web