இந்த படங்கள் நிச்சயம் 1000 கோடி வசூலிக்கும்..! இந்த லிஸ்ட்ல விஜய் அஜித் படங்கள் இல்லையே..!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் படக்குழுவினர் சென்று விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் ஷங்கர் நான்கு படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கணித்தார். குறிப்பாக ’கல்கி 2898 ஏடி’ படத்தை பார்த்ததாகவும் அந்த படம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், இந்திய திரையுலகின் பெருமைக்குரிய படம் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கலந்து சில மாதங்களுக்கு முன்பே நான் கணித்தேன் என்றும் அந்த வகையில் தற்போது இந்த படம் 500 கோடியை தாண்டி வசூல் சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
மேலும் இனி வெளியாக கூடிய ’புஷ்பா 2’ ’கூலி’ மற்றும் ’கங்குவா’ ஆகிய படங்களும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த பட்டியலில் தன்னுடைய இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ மற்றும் ’கேம் சேஞ்சர்’ படங்களை அவர் கூறவில்லை என்பதும் அதேபோல் அஜித் நடித்த ’விடாமுயற்சி’ மற்றும் விஜய் நடித்த ’கோட்’ படத்தையும் அவர் இந்த லிஸ்ட்டில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.