இவங்க வேணும்னு செய்யுறாங்க..! நம்பாதீங்க..! வேட்டையன் தரமான படம்..!

பிரபல சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான அந்தணன் வேட்டையன் படம் பற்றி பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், வேட்டையன் படத்தின் இரண்டாம் பாதியில் சில தோய்வுகள் காணப்படுகின்றது. ஆனால் இந்த படம் நல்ல படமே இல்லை தோல்வி படம் என்று சொல்வதெல்லாம் பிழையான ஒன்று.
வேட்டையன் படத்தின் முதல் பாதி முழுவதும் பரபரப்பான திரில்லர் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும், அந்த குணா போர்ஷன் ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்திருந்தது.
கோட் படம் வெளியானபோது மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் அதனை தோல்வி படமாக்க வேண்டும் என்று படுமோசமான விமர்சனங்களை கொடுக்க ஆரம்பித்தார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் டிசாஸ்டர் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து சோசியல் மீடியாவில் விமர்சகர்கள் என்ற பெயரில் வேட்டையன் படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.
ஆனாலும் இதையெல்லாம் நம்ப வேண்டாம். விஜய் ரசிகர்கள் என்னதான் பொய் பிரச்சாரம் செய்தாலும் வேட்டையன் நல்ல படம்தான் என்று தனது பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார் அந்தணன்.