இவங்க தான் பிக்பாஸ் பைனல்ல ஜெயிக்கணும்.. கடைசி நேரத்தில் குண்டை தூக்கி போட்ட கூல் சுரேஷ்..!

 
1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்போது 6 போட்டியாளர்கள் மட்டும் பைனலுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.இவர்களில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதிகமானோர் முத்துக்குமரன் ஜெயிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் சௌந்தர்யா ஜெயிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அதுபோல ஒரு சிலர் தீபக் ஜெயிக்க வேண்டும் என்று சொல்லி வந்தனர். ஆனால் தீபக் நேற்று எவிக்ஷசன் ஆக்கிவிட்டதால் பவித்ரா ஜெயிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனைக்கு மத்தியில் முந்தைய பிக் பாஸ் போட்டியாளரான கூல் சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக எங்க வீட்டு மருமகள் தான் ஜெயிக்க வேண்டும் என்று நான் சொல்வேன், எங்க வீட்டு மருமகள் வேறு யாரும் இல்லை சௌந்தர்யா தான்.

அதாவது எப்படின்னா நான் போன சீசனில் கலந்து கொண்டபோது என்னோடு இருந்து விஷ்ணுவின் வருங்கால மனைவி தான் சௌந்தர்யா. விஷ்ணு என்னுடைய தம்பி அப்போ அவளுடைய வருங்கால மனைவி சவுந்தர்யா எனக்கு கொழுந்தியா முறை வரும். அவங்க எங்க வீட்டு மருமக அவங்கதான். இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கணும் அதுக்காக மக்களே மறந்துவிடாமல் சௌந்தர்யாவுக்கு ஓட்டு போட்டு விடுங்க என்று அவர் சொல்லியிருக்கும் நிலையில் அதிகமான கமெண்ட்கள் குறித்து வருகிறது.

ஏற்கனவே சௌந்தர்யா இந்த சீசனில் பிஆர் ஓட்டு வைத்துதான் இத்தனை நாட்கள் ஜெயிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது.வெளியே மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் கூட சௌந்தர்யா குறித்து இதுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் எவிக்ட் ஆகி வெளியே சென்ற சுனிதா இன்று சௌந்தர்யாவிடம் நேருக்கு நேர் நீங்கள் பி ஆர் வைத்ததால் தான் உங்களால் இந்த வீட்டிற்குள் இருக்க முடிகிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இப்போது கூல் சுரேஷ் சௌந்தர்யாவிற்காக வாக்கு கேட்டு வீடியோ வெளியிட்டதும் வைரலாகி வருகிறது.

From Around the web