”தேறிவிடுவார் என்றார்கள்; ஆனால் நிதீஷ் வீரா இறந்துவிட்டார்” வெற்றிமாறன் உருக்கம்..!

 
”தேறிவிடுவார் என்றார்கள்; ஆனால் நிதீஷ் வீரா இறந்துவிட்டார்” வெற்றிமாறன் உருக்கம்..!

இரண்டு நாட்களுக்குள் உடல்நலம் தேறிவிடுவார் என்று கூறினார். ஆனால் அவர் மறைந்துபோனது அதிர்ச்சியாக உள்ளது என நடிகர் நிதீஷ் வீரா மரணம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழில் கவனிக்கத்தக்க துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிதீஷ் வீராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணம் திரைத்துறை, சின்னத்திரை கலைஞர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுளது. 

நடிகர் நிதீஷ் வீராவின் மறைவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனுஷ் மூலமாக நிதீஷ் எனக்கு பழக்கமானார். அசுரனுக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய இழப்பு மிகப்பெரிய இழப்பு, குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். 

From Around the web