அருண் விஜய்யின் கெரியரிலேயே அதிக சம்பளம் இந்த படத்தில் தானாம்..!
Dec 4, 2024, 09:05 IST

தனுஷ் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் 'இட்லி கடை'. இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, வில்லனாக அருண் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.
அத்தோடு ஷாலினி பாண்டே மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'இட்லி கடை' படத்திற்கு அருண் விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இவர் படங்களுக்கு வாங்கிய சம்பளத்தை விட ரூ.3 கோடி அதிகமாகும்.
இது உண்மையாகும் பட்சத்தில் அருண் விஜய்யின் கெரியரிலேயே இது அதிக சம்பளமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, இப்படத்திற்கு ரூ.8 கோடி வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.