இந்த கவர்ச்சி நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு... நிரபராதி என நிரூபித்தவர் - பயில்வான் ஓபன் டாக்..!
பாய்ஸ் படத்தில் விபச்சாரியாக சிறிய காட்சியில் தோன்றி பிரபலமானவர் நடிகை புவனேஸ்வரி. இந்த படத்துக்கு முன்னர் தமிழ்நாடு ரசிகர்களின் மனம் கவர்ந்த டிவி சீரியலாக இருந்த சித்தி என்ற தொடரில் நடித்து புகழ் பெற்றார்.
புவனேஸ்வரியின் மறுபக்கம் குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிகைண்ட் கோல்ட் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கவர்ச்சியின் பிம்பமாக இருந்தவர் புவனேஸ்வரி. பூனைக்கண் புவனேஸ்வரி என்று கூட இவரை அழைத்தார்கள். டிவி, சினிமா என்று ஒரு ரவுண்ட் வந்தார்.
இவர் மீது விபச்சார வழக்கு தொடரப்பட்ட கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்து வழக்கை எதிர்கொண்ட புவனேஸ்வரி தான் நிரபராதி என நிருபித்தார். ஆனால் அது பற்றி யாரும் பெரிதாக செய்திகள் வெளியாகவில்லை.
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சேதுராமனின் தேவர் பேரவையில் மகளிர் அணி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவரை பற்றி பலருக்கும் தெரியாமல் இருந்தது.
டிவி சீரியில் சிரமம்பட்டு நடிகையாக வந்த இவர், பின்னர் சினிமாவுக்கு வந்தார். அவருக்கு சென்னையில் மூன்று, நான்கு பங்களாக்கள் இருக்கிறது. இவை அனைத்து ஷுட்டிங் பங்களாவாக இருக்கிறது. தனது பழைய வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு சாமியாரினியாக வாழ்ந்து வருகிறார். அதாவது துறவி வாழ்க்கை வாழ்கிறார்.