இது செம காம்போ ஆச்சே..! அட்லியின் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறாரா..?

இயக்குநர் அட்லி ,வழங்கிய நேர்காணல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், நான் பயங்கரமான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் ரசிகன். ரஜினி காந்த் தனது இன்ஸ்பிரேஷன். அவரை பார்த்து தான் நான் மேடையில் எப்படி பேச வேண்டும் என்று கற்று கொண்டேன்.
மேலும் எனது அம்மா ரஜினி ரசிகை. அதை பின்பற்றியே நானும் ரஜினி ரசிகன் ஆனேன். அத்துடன் ரஜினியுடன் 300 நாள் எந்திரன் ஷூட்டிங்கில் இருந்ததாகவும் அவரை தனக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார் அட்லி. அத்துடன் ரஜினி சாருடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் எனக்கு நேரம் இல்லாததால் படம் எடுக்க முடியவில்லை என்றார்.
இவ்வாறான நிலையிலையே ரஜினியின் "பாட்ஷா" படத்தை விட பிரமாண்டமான படம் ஒன்றை எடுக்கப்போவதாகவும், தான் கண்டிப்பாக அடுத்த படத்தை ரஜினியை வைத்து எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார். அட்லீ வழங்கிய பேட்டி ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.