இது செம காம்போ... ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் - கவின் - அனிருத்..!   

 
1

விஜய் நடிப்பில் வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்தில் வரும் “நா அடிச்சா தாங்க மாட்ட” பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சத்தமில்லாமல் படிப்புக்காக வெளிநாடு சென்றார். பின்னர் அவரை நடிக்க வைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றன. இதற்காக அல்போன்ஸ் புத்திரன் கதையும் சொன்னார். ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

அண்மையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களும் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.  முதலில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமின் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Kavin - Anirudh

ஆனால், சஞ்சய் அறிமுக இயக்குநர் என்பதால் பிரபல இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தால் தான் படத்தின் மார்க்கெட் உயரும் என தயாரிப்பு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் படத்திற்கு நாயகனாக நடிகர் கவினை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா படத்தின் வெற்றிக்குப் பின் கவினுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளதால் அவரை தேர்வு செய்ய ஜேசன் சஞ்சய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 


ஜேசனின் முதல் படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. 

From Around the web