இது நான் நடிக்க வேண்டிய படம்..எல்லாம் என் விதி…வருத்தத்தில் ட்வீட் போட்ட பிரபல நடிகர்!

 
1

கார்த்தி நடிப்பில் உருவான நான் மகான் அல்ல திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்த நிலையில், இது தொடர்பான போஸ்டர் ஒன்றை போஸ்ட் போட்டு காட்டி தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு நழுவிச் சென்றது குறித்து தளத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் வேதனையுடன் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பக்கத்தில் இப்படம் எனக்குப் பிடித்தமான படங்களில் ஒன்று.வெண்ணிலா கபடி குழு படத்துக்குப் பிறகு இரண்டாவது படமாக இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்து நான் நடித்திருக்க வேண்டிய படம் இது எல்லாமே சரியாக தான் போனது…

கிட்டத்தட்ட எல்லாமே இறுதியாகிவிட்டது. ஆனால் விதி வேறொரு திட்டத்தை வைத்திருந்தது.சில சமயங்களில் இது என்னுடைய இரண்டாவது படமாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்பேன் என பதிவிட்டுள்ளார் இதனால் இவர் இந்த படத்தை மிஸ் செய்தது காரணத்தால் வருத்ததில் உள்ளார் என இதன் மூலம் தெரிகிறது.


 

From Around the web