தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சி! ஒருவர் மட்டுமே நடித்த படம், ஆனாலும் சண்டை காட்சிகள் உண்டு!

 
1

ஒரே ஒருவர் மட்டுமே நடித்த பார்த்திபன் நடித்த ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக ’ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜி சிவா நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் இந்த படத்தில் நடித்து ஜி சிவா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் அவருடைய பிரபலமான டயலாக்கை தலைப்பாக வைத்து உள்ளேன் என்றும் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளேன் என்றும் சிவா தெரிவித்துள்ளார். 20 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றும் ஒரே ஒரு கேரக்டர் நடித்தாலும் இந்த கதையில் ஹீரோயின் உண்டு, சண்டை உண்டு, சோக பாடல் உண்டு, காதல் பாடல் எல்லாம் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு சமூக கருத்தை சொல்லும் படமாக இந்த படம் அமைந்துள்ளது என்றும் ஜி சிவா தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இதுபோல் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழில் நான் இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

From Around the web