இவர் என்னுடைய தீபிகா படுகோன்- செல்வராகவன் பதிவிட்ட வைரல் புகைப்படம்..!

 
இயக்குநர் செல்வராகவன்

இவர் எனக்கே சொந்தமான தீபிகா படுகோன் என இயக்குநர் செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

காதல் கொண்டேன் படத்தை இயக்கிய போது உடன் பணியாற்றிய கதாநாயகி சோனியா அகர்வாலுடன் செல்வராகவனுக்கு காதல் ஏற்பட்டது. நீண்ட வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். அதை தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக 2010-ம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றனர். அதை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு மயக்கம் என்ன படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தன்னுடைய மனைவி குறித்து அவ்வப்போது மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது அவரை ”என்னுடைய தீபிகா படுகோன்” என்று குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். எதற்காக செல்வராகவன் மனைவி கீதாஞ்சலியை தீபிகா படுகோன் என்று குறிப்பிட்டார் என தெரியவில்லை.

ஆனால் தமிழ்நாட்டிலுள்ள தீபிகா படுகோன் ரசிகர்கள் பலரையும் செல்வராகவன் இன்ஸ்டா பதிவு கவர்ந்துள்ளது. அதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். செல்வராகவனை திருமணம் செய்தவுடன் “மாலை நேரத்து மயக்கம்” என்கிற படத்தை கீதாஞ்சலி இயக்கினார். 

அண்மையில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்துள்ள அவர், விரைவில் புதிய படத்தை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். விரைவில் இதுதொடர்பான நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளன.

From Around the web