தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இணைந்த மற்றொரு இந்திய பிரபலம்- இவர்தான்..!

 
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இணைந்த மற்றொரு இந்திய பிரபலம்- இவர்தான்..!

ஹாலிவுட்டில் தயாராகி வரும் ‘தி கிரே மேன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், மற்றொரு கதாபாத்திரத்திற்கு பிரபல இந்திய நடிகையை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழில் ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ படங்களை முடித்துவிட்டு, கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வந்தார். அந்த படத்துக்கான முதல் ஷெட்யூல் முடிவடைந்ததை அடுத்து ஹாலிவுட்டில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் ‘தி கிரே மேன்’ படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுவிட்டார்.

அங்கு படத்தில் நடிப்பதற்காக 6 மாத காலம் பயிற்சி வகுப்புகள் நடந்தன. அதில் நடிகர் தனுஷ் ஆர்வமுடன் பங்கேற்றார். அதை தொடர்ந்து ‘தி கிரே மேன்’ படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியானது. இந்த படத்தில் அவருடன் ராயான் காஸ்லிங், கிறிஸ் இவென்ஸ் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் தவிர் மற்றொரு இந்திய பிரபலமும் ‘தி கிரே மேன்’ படத்தில் நடிக்கிறார். அவர் மராட்டிய மொழி நடிகையான ஐஸ்வர்யா சோனார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘காய் ரே ராஸ்கலா’ என்கிற் படத்தில் நடித்து இவர் பிரபலமானார். 

அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ படத்துக்கான ஆடிஷன் நடத்தப்பட்டது. அப்போது தன்னுடைய திறமையை நிரூபித்து படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஐஸ்வர்யா சோனார் பெற்றுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 

From Around the web