இது தான் என் முகம்... இதுதான் இந்தியன் ஆர்மியின் முகம்...அலற வைக்கும் சிவகார்த்திகேயனின் 'அமரன்' டீசர்..!

 
1

உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் சார்பில் தயாரித்துள்ள படம் தான் அமரன்.நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரையும் நடித்திராத புதிய கெட்டப்பில், அதாவது கம்பீரமான ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க தேசப்பற்று நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.காஷ்மீர் - இந்தியா இடையே நடக்கும் போர்க்காட்சிகள், ஒரு தலைவனாக தன்னுடைய குழுவில் உள்ளவர்களை எப்படி கையாளுகிறார், எப்படி ஊக்குவிக்கிறார் என்ற பல்வேறு விஷயங்களை இந்த டீசரில் காணமுடிகிறது.

அதேபோல, அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே என பாரதியார் பாடலை பாடிக் கொண்டு ராணுவ வீரர்களை வண்டியில் செல்வது,  யாரும் முகத்தை மறைக்கக்கூடாது, இதுதான் என் முகம்.. இது தான் இந்தியன் ஆர்மியின் முகம்  என்பதை காட்டு.. என்று சிவகார்த்திகேயன் கூறுவது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகிறது.

From Around the web