இது தான் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் போட்ட இரண்டாவது போஸ்ட்..!

 
1

இன்ஸ்டாகிராமுக்கு நடிகை நயன்தாரா திடீரென என்ட்ரி கொடுக்க இப்படியொரு பின்னணி இருப்பதை அவரே வெளிப்படையாக அடுத்தடுத்த போஸ்ட்டுகளில் அறிவித்து விட்டார். பட புரமோஷன்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வரும் நடிகை நயன்தாரா சென்னையில் நேற்று நடைபெற்ற ஷாருக்கானின் ஜவான் பட புரமோஷனுக்கும் கலந்து கொள்ளவில்லை.

மும்பை மற்றும் வெளிநாடுகளில் நடைபெற உள்ள புரமோஷனுக்கும் நயன்தாரா செல்லமாட்டார் என்கிற நிலையில், சோஷியல் மீடியா மூலம் ஜவான் படத்தை புரமோட் செய்ய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு தொடங்கி உள்ளார் நயன்தாரா.

முதல் போஸ்ட்டுக்கு பிறகு அடுத்தடுத்து ஜவான் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை வரும் 7ம் தேதி மறக்காமல் ஜவான் படத்தை பார்க்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் போல நயன்தாராவும் இனிமேல் தனது படங்களின் புரமோஷனுக்கு சோஷியல் மீடியாவை பயன்படுத்துவார் என தெரிகிறது. இப்படியொரு விஷயத்தை இவர் இதற்கு முன்பாகவே செய்திருந்தால் விஜய்யின் பிகில், ரஜினிகாந்தின் தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு பலமாக அமைந்திருக்குமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

From Around the web