இதுதான் ’புஷ்பா’ என்கிற அல்லு அர்ஜுன்- சான்ஸே இல்ல..!!

 
இதுதான் ’புஷ்பா’ என்கிற அல்லு அர்ஜுன்- சான்ஸே இல்ல..!!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் புஷ்பா படத்தின் ஹீரோ அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்னர் வெளியான ‘அலா வைகுந்தபுரம் லோ’ படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பாடல்களுக்கு தேசியளவில் வரவேற்பு கிடைத்தது. பல்வேறு சமூகவலைதளங்களிலும் இந்த பாடல்களை ரசிகர்கள் தொடர்ந்து டிரெண்டிங் செய்துகொண்டே இருந்தனர்.

அந்த படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இந்த படம் செம்மரக் கட்டை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் புஷ்பா ராஜ் என்கிற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.

முன்னதாக இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதியை படக்குழு அணுகியது. ஆனால் அவர் கால்ஷீட் காரணமாக மறுத்துவிட, அதே கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஃபகத் பாசிலை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் புஷ்பா படத்தின் ஹீரோ அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜூனின் 38-வது பிறந்தநாளை முன்னிட்டு அதை சிறப்பிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், அல்லு அர்ஜுனின் தோற்றமும் மிரட்டலாக உள்ளது. புஷ்பா ராஜ் அறிமுக வீடியோவை சமூகவலைதளத்தில் இதுவரை 12 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். யூட்யூப் டிரெண்டிங்கில் இந்த வீடியோ முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்டமாகவும் மிரட்டலாகவும் தயாராகி வரும் ‘புஷ்பா’ படம் வரும் ஆகஸ்டு மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், படத்திற்கு இசையமைக்கும் பணியை தேவி ஸ்ரீ பிரசாத் ஏற்றுள்ளார். இதுதொடர்பான அடுத்தக்கட்ட தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும். 
 

From Around the web