இது பாகுபலி இல்ல... ஆனா பாகுபலி படத்தை மிஞ்சும் சிம்புவின் புதிய தோற்றம்! 

 
1

சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர் சிம்பு நடிப்பில், இறுதியாக மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் ஹிட் கொடுத்து இருந்தார்.

இதை தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர்48 படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு. வரலாற்று பின்னணியில் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் என அடிக்கடி அப்டேட் வெளியாகியது.

இந்த நிலையில், இந்த திரைப்படம் தொடர்பிலான மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார் சிம்பு.

குறித்த வீடியோவின் படி, போர் வீரர்கள் பலர் சூடி நிற்க, குதிரைகள் கனைக்கும் சத்தத்திற்கு நடுவே சிலம்பரசன் நடந்து வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிம்பு.   

தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 


 


 

From Around the web