இது என் அதிகாரபூர்வ கணக்கு இல்லை..! நடிகை ஷாலினி வெளியிட்ட பதிவால் பரபரப்பு..! 

 
1

பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகையர் பெயரில் போலியான சமூக வலைதள பக்கங்கள் ஆரம்பிக்கப்படுவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அந்த பக்கங்களை உண்மையான பிரபலங்களின் பக்கங்கள் என்று நினைத்து ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவதும் தொடர் கதை ஆகி உள்ளது.

இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வ பக்கங்கள் இருக்கும் நிலையில் அவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் ட்விட்டரில் போலி பக்கம் ஆரம்பித்து அதில் கிட்டத்தட்ட 81 ஆயிரம் ஃபாலோயர்கள் பெற்றுள்ளார். 

இதனை அடுத்து ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சம்பந்தப்பட்ட போலி எக்ஸ் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பதிவு செய்து இது என்னுடைய உண்மையான ட்விட்டர் அக்கவுண்ட் இல்லை என்றும் எனவே தயவு செய்து யாரும் இந்த பக்கத்தை ஃபாலோ செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து உண்மையை தெரிவித்த உங்களுக்கு நன்றி என்றும் இது போன்ற போலியாக சமூக வலைதள பக்கம் பதிவு செய்பவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்றும் ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

From Around the web